திருட்டு ஓட்டு...! பாமக வேட்பாளர் மறியல்! மணிப்பூர் துப்பாக்கிசூடு...சவால் ஓட்டு!

திருட்டு ஓட்டு...! பாமக வேட்பாளர் மறியல்! மணிப்பூர் துப்பாக்கிசூடு...சவால் ஓட்டு!

ஜி.கே.சேகரன், நரேஷ்.என்.

  தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவின் போது ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்தது. இந்திய அலவில் மணிப்பூரில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு வாக்கு சாவடி சூறையாடப்பட்டது. ஆக இந்திய அளவில் 102 தொகுதிகளில் 62.37 சதவிகிதமும், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இன்றி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின.

 திருட்டு ஓட்டு...பாமக வேட்பாளர் மறியல்.

 மாந்தாங்கல் மோட்டூ£ ¢கிராமத்தில் கள்ள ஓட்டு  போட்டதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பாலு வாக்குசாவடி அருகே பாமகவினருடன் போராட்டம் நடத்தினார்.

 இராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை மாந்தாங்கல் மோட்டூர் துவக்கப்பள்ளியில் வாக்குசாவடி மையம் 185 இல் திமுகவை சேர்ந்த கமல் மற்றும் லோகநாதன் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட கள்ள ஓட்டு பதிவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வாக்களிக்க வந்த பல்லவி என்ற பெண்ணின் ஓட்டையும் அவர்களே போட்டுள்ளனர்.  இதுகுறித்து பாமகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புகார் அளித்தனர்.  அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததுடன்  கள்ள ஓட்டு போடும் திமுகவை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு தேர்தலை நியாயமாக நடத்த கோரி கோஷம் எழுப்பினர்.

கோவை:-

 கோவை நாடாளுமன்றத் தொகுதியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பிராமணர்களின் வாக்குகள் திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பிராமணர்களின் வாக்குகள் பாஜகவுக்கு விழும் என்று தெரிந்தே வேண்டுமென்றே அதை நீக்கியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சவால் ஓட்டு,

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாஷீராபாத் பகுதி இஸ்லாமிய நிதி உதவி துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு மையத்தில் பஷீராபாத் தொகுதியை சேர்ந்த வசீம் என்பவர் சரியாக மாலை 6 மணிக்கு வாக்கு மையத்திற்கு  வந்தபோது நேரம் முடிந்து விட்டதாக கூறிய அலுவலர் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் வாக்கு மைய அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் அந்த வாக்காளர் தன்னுடைய ஓட்டு செலுத்தினார்.

 அந்த மையத்தில் மொத்தம் 1454 வாக்குகளுக்கு 898 வாக்குகள் பதிவாகி இருந்தது.

கடைசியாக செலுத்தப்பட்ட அந்த ஒரு வாக்கு டெண்டர் ஓட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பசுமை வாக்கு சாவடி,

 புதூர்நாடு மலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பசுமைவாக்குசாவடி வாக்காளர்களை மிகவும் கவர்ந்தது

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் புதூர்நாடு மலை கிராம பகுதியில் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பசுமை வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டு மலைவாழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தினார்கள். இந்த பசுமை வாக்குச் சாவடியானது வாக்காளர்களை மிகவும் கவர்ந்தது.

மணிப்பூர் துப்பாக்கி சூடு

அதே போல் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிக்ளுக்கான வாக்குபதிவின் போது மணிப்பூரில் துப்பாக்கிசூடு நடைபெற்றது.

மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

 இந்நிலையில், மணிப்பூர் பள்ளத்தாக்கில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன. கிழக்கு இம்பாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மதியம் 2 மணி அளவில் ஆயுதமேந்திய ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 65 வயது நபர் ஒருவர் காயம் அடைந்தார். பிறகு, இங்கு வாக்குச்சாவடி சேதப்படுத்தப்பட்டு, ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள தமன்போக்பி என்ற இடத்தில் நேற்று மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

 மேற்படி இந்த 2 இடங்களும் உள்மணிப்பூர் தொகுதியில் அமைந்துள்ளன. இந்த தொகுதி பெரும்பாலும் மைதேயி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் நாள் முழுவதும் ஆயுதமேந்திய நபர்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பழமைவாத மைதேயி ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

 இம்பால்,

 கிழக்கு இம்பாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் போலீஸாருடன் காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இங்கு காங்கிரஸ் முகவர்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

  கிழக்கு இம்பால் தோங்ஜூவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அடித்து உடைக்கப்பட்டது, மேற்கு இம்பால் உரிபோக் பகுதியில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. இத்தகவல்களை மணிப்பூர் தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா உறுதிப்படுத்தினார்.