காலனி தொழிலார்களுக்கு நடத்தப்பட்ட மாரத்தான்!

காலனி தொழிலார்களுக்கு நடத்தப்பட்ட மாரத்தான்!

 கு.அசோக்,

ஐ ரன் எத்திக்ஸ் என்ற தலைப்பில்    சுற்றுசூழலை பாதுகாக்கவும் உடல் நலனை பாதுகாக்கவும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது

  ராணிப்பேட்டை மாவட்டம்,  சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா இன்டர்நேஷனல் தொழிற்சாலை நிறுவனத்தின் 61-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஐ ரன் ஃபார் எத்திக்ஸ் என்ற தலைப்பில் சுற்றுசூழலை பாதுகாக்கவும் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்றது.

  இந்த மாரத்தான் போட்டி சிப்காட் பகுதியில் உள்ள டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையான ஏ யூனிட்டில் இருந்து சிப்காட் தொழிற்பேட்டையின் முக்கிய சாலை வழியாக 3 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று பி யூனிட் தொழிற்சாலை வரை நடைபெற்று  நிறைவடைந்தது.

  இந்த மாரத்தான் போட்டியில் டாடா இன்டர்நேஷனல் காலணி தொழிற்சாலையை சேர்ந்த நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் என இரு பலரும் போட்டியில் பங்கேற்று இருந்தனர்.

  இந்த மாரத்தான் போட்டியை டாட்டா இன்டர்நேஷனல் தொழிற்சாலையில் சுரேஷ் பிசினஸ் ஹெட் கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்தார்.