பாசறை இளைஞர்களை பயன்படுத்த தீர்மானம்!

பாசறை இளைஞர்களை பயன்படுத்த தீர்மானம்!

  ஜி.கே.சேகரன்,

 வேலூரில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது

   வேலூர்மாவட்டம், வேலூரில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் கழக அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது இதில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

¢ இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இதில் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் மறைவிற்கு இரங்கல் தீர்மானமும்,பொய் பிரச்சாரங்களை செய்து ஆட்சிக்கு வந்த திமுகவின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் இளம்பெண்கள் பாசறையினரை கொண்டு பூத் கமிட்டி    அமைத்தல் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.