பா.ஜ.க பிரசாரத்தை முறியடியுங்கள்! அ.தி.மு.க. ஐ.டி.,விங்குக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் வேண்டுகோள்!

பா.ஜ.க பிரசாரத்தை முறியடியுங்கள்! அ.தி.மு.க. ஐ.டி.,விங்குக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் வேண்டுகோள்!

   ம.பா.கெஜராஜ்,

   பா.ஜ.,  திமுக.,விற்கு அடுத்த பெரிய கட்சி போலவும், மற்றும் எதிர்க்கட்சி போன்ற பிம்பத்தை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.  அந்த பொய் பிரசாரத்தை முறியடித்து, அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்பதை அதிமுக ஐ.டி.,விங் நிரூபணம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக தமிழகத்தில் அதிமுக.,வை விட பா.ஜ.,வின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

   இதனால், திமுக - அதிமுக என்றிருந்த அரசியல் களம், திமுக - பா.ஜ., என மாறத் துவங்கி உள்ளதாகவே பேசப்படுகிறது.

  இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், அதிமுக அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பேசுகையில், அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரசாரத்தை பா.ஜ., மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால், நாம் இதை செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் இதை பரப்பி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று படபடத்தார்.