வேலூரில் குட்கா வியாபாரம் நடத்தும் சப் இன்ஸ்பெக்டர்! சொத்தை பறிமுதல் செய்ய கோரிக்கை!
ஜி.கே.சேகரன்,
ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் ஈடுபட்டு, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் உலாவருகிறது.
வேலூர் சிறைச்சாலை பகுதியில் பூர்வீகமாக வசிக்கும் ஒரு காவல் உதவி ஆய்வாளர், கடந்த ஒரு ஆண்டாக குட்கா வழக்குகளில் பிடிபட்ட வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருகிறாராம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து இரவு நேரங்களில் குட்கா கடத்தி வரும் வாகனங்களைப் பற்றிய தகவலை முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதே வாகனங்களை தானே பிடிக்கும் நாடகத்தையும் நடத்தி, பிடிபட்ட குட்கா பொருட்களில் 70 முதல் 80 சதவீதம் வரை விற்று லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
வாகனங்களில் இருந்த குட்கா பொருட்களை மறைமுகமாக விற்று, ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் 5,000 முதல் 10,000 வரை கொடுத்து மீதியைக் கைப்பற்றிக் கொள்கிறார்.
மேலும் குட்கா வண்டியுடன் மாட்டிக்கொள்ளும், வடஇந்திய டிரைவர்களிடம் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விடுவதாகவும், எந்த வழக்கும் பதிவு செய்யாமல் கோப்புகளை மூடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் உயர் அதிகாரிகளிடம் தன்னை "நேர்மையான சூப்பர் போலீஸ்" எனக் காட்டிக் கொண்டு புகழைப் பெற்றுள்ளார். நிஜத்தில், குட்கா வியாபாரம் தான் இவரின் முக்கிய வருமான வழியாக மாறியிருக்கிறது என சக காவலர்கள் கூறுகின்றனர்.
இவர் வாரத்தில் 3 முறை மது அருந்துவதாகவும், அந்த மது பாட்டில்களை கூட குட்கா வியாபாரிகளே வாங்கிக் கொடுக்க வேண்டுமென வற்புறுத்துவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், மது வாங்கி தரவில்லை என்றால் "கஞ்சா வழக்கில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்கிறேன்" என வாட்ஸாப் வாயிலாக மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு தகவல் வழங்கிய சில இன்பார்மர்கள், வியாபாரிகளிடமிருந்து மிரட்டல் ஏற்பட்டதால் தங்கள் பணியை விட்டு விலகியுள்ளனர். இதனால் வருமானம் குறைந்த காவலர், கோபத்தில், அந்த இன்பார்மர்களை தொடர்ந்து மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இவர் யாரிடமிருந்து பணம் பெற்றார், எந்த இடங்களில் சந்திப்பு நடந்தது, வாட்ஸாப் கால் ரெக்கார்டுகள், ஆடியோ வொய்ஸ் நொட்டுகள் போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆதாரமாக உள்ளதாகவும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
"சட்டத்தை காக்க வேண்டிய சப் இன்ஸ்பெக்டரே சட்டத்தை மீறுவது வேலூர் காவல்துறையின் கண்ணியத்துக்கு களங்கம்" என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சட்ட விரோதமாக இவர் சம்பாதிப்பதற்காக தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இவர் மீது அனைத்து ஆதாரங்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளனராம்.
குட்கா வியாபாரியாக செயல்படும் சப் இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள் கண்டிப்பதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோருகின்றனர்.
எல்லாம் சரி? யார் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்று விசாரித்த போது கடந்த சில ஆண்டுகளுக்கு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்ற முன்னணி தமிழ் கதாநாயகியின் கணவரின் பெயர் கொண்டவராம்.

admin
