அரசு ஆஸ்பத்திரியில் இருக்கை இல்லாததால் தரையில் அமரும் பொதுமக்கள்!

அரசு ஆஸ்பத்திரியில் இருக்கை இல்லாததால் தரையில் அமரும் பொதுமக்கள்!

 ஜி.கே.சேகரன்,

 வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற  நோயாளிகள் அமர இடமில்லாமல்  தரையில் அமரும் அவல நிலை.பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் என பொதுமக்கள் வேதனை.

 வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளை காண பலர் வந்து செல்கின்றனர்.

  அவ்வாறு உறவினர்கள் அமர போதிய இருக்கை வசதி இல்லாததால் அவர்கள் தரையில் அமரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  அரசு மருத்துவமனையில் தரையில் அமருவதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மருத்துவமனையின் உள்ளே  திறந்த வெளி பகுதியில் மேல்குரை அமைப்பதற்கு மருத்துவ நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நோயாளிகள் அமர்வதற்கு ஏதுவாக வசதி செய்து தர வேண்டுமென பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.