பட்டப் பகலில் பட்டாகத்தியுடன் வலம் வந்த போதை ஆசாமி!
கு.அசோக்,
அரக்கோணத்தில் பட்டப் பகலில் பட்டாகத்தியுடன் வலம் வந்த நபர் அவ்வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டியதால் பதற்றம். மக்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது..
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன்ஹால் நான்காவது தெருவில் அங்கு பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் அவ்வழியாக வந்து செல்லும் மக்களை கத்தியுடன் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இவ் வழியாக யாரும் செல்லக்கூடாது என்றும் சென்றால் கத்தியால் வெட்டுவேன் என கத்தி வைத்துக் கொண்டு மிரட்டியதால் பதறிப் போன பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.
பட்டாகத்தியுடன் பட்டப் பகலில் அலப்பறையில் ஈடுபட்ட நபர் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் பட்டாக்கத்தியுடன் வலம் வந்த நபரை நைசாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பட்டிமோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கஞ்சா போதையில் இது போன்ற அலப்பறையில் வாலிபர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா கலாச்சாரமும் கத்தி கலாச்சாரமும் ஓங்கியுள்ளதாகவும், இதனை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பட்டப் பகலில் அரக்கோணம் நகரத்தின் மையப் பகுதியில் குடியிருப்பு மத்தியில் பட்டாகத்தியுடன் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

admin
