செவிலியர்களுக்கு தங்கும் இடங்கள் இல்லை! மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு!
கு.அசோக்,
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் சார்பில் பெருந்திரள் முறையீடு கூட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் சங்கமாவட்டத் தலைவர் சரவணராஜ் தலைமையில் நடந்த இதில்,¢ பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர்
இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சரவணராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் இன்று பெருந்திரள் முறையீடு செய்தோம் கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவ தொடர்பாளர்கள் இதில் 10800 காலிப்பணியிடங்கள் உள்ளது மேலும் கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும் அவர்களுக்கு அதிக அளவு பணிசுமை வழங்கபடுகிறது கணினி இயக்க வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.
செவிலியர்கள் தங்கும் இடங்களும் இல்லை வேலை பளுவை குறைக்க வேண்டும் பணி தளத்தில் பாதுகாப்பு வழங்க கோரி இந்த முறையீடு நடந்தது என கூறினார்.

admin
