தண்டவாளத்தில் கற்களை வைத்த குடிபோதை ஆசாமி!

தண்டவாளத்தில் கற்களை வைத்த குடிபோதை ஆசாமி!

ஜி.குலசேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்திற்கும் பச்சை குப்பம் ரயில் நிலையத்திற்கும் இடையே கன்னிகாபுரம் என்கிற கிராமத்தில் போதை ஆசாமி ஒருவர் தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  பின்னர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பெரியதாட்டான் குளம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் சிவகுமார் என்பதும் இவர் குடிபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

  இதன் காரணமாக சிவகுமாரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.