சிபில் ஸ்கோர் கேட்பது ரத்து!

ஜி.குலசேகரன்,
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வங்கிகளில் சிபில் ஸ்கோர் கேட்பதை ரத்து செய்ததால் விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர் - விவசாயிகள் சங்க மாநில செயலாளர் உதயகுமார் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த அன்று சென்னன ராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர்தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிர் கடன் பெற சிபில் ஸ்கோர் கேட்பதை கைவிடவேண்டும் இல்லையெனில் வருகிற 21.07.25 அன்று சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த 15-07-25 அன்று தீர்வு காணப்பட்டு பிரச்சணைக்கு சிபில் ஸ்கோர் கேட்பதை கைவிடுவதாகவும் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை தளர்த்துவதாக உறுதியளிக்கப்பட்டது.
எனவே மேற்கொண்டு போராட்டம் நடத்தப்படவிருந்ததை கைவிடபட்டு ஒத்தி வைக்கபடுவதாகவும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அரசுக்கு நன்றி எனவும் சொன்னார்.