பெண் ஆளுக்கு ரூ.750! ஆசிரியருக்கு ரூ.2000?கூலி! அராஜகத்தை கைவிடுங்க!

ம.பா.கெஜராஜ்,
கடந்த பத்து நாட்களாக அரசுபள்ளி ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக கொஷங்களை எழுப்பி அராஜகத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
நேற்றும் கூட சென்னை டிபிஐ வளாகத்தில் மறியல் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டனர்.
தேர்தல் நெருங்குகிற நேரத்தில் இப்படி இவர்கள் அரசின் குரலை பிடிப்பது வாடிக்கைதான் என்றாலும் கூட அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும் என்கிற குரல் எழுந்து வருகிறது.
இந்த அராஜக போக்கின் மத்தியில் ஒரு நிகழ்வை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம். நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சுமார் ரூ.2000/ம் மற்றும் அதற்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் இந்த சம்பளம் உண்டு. அதோடில்லாமல் இதரபடிகள் மண்ணாங்கட்டி என்று அரசாங்கம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இது போதாது என்று வீதிக்கு வந்து இவர்கள் கலாட்டா செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் ஆசிரியர்மார்களே கட்டிட வேலைக்கு செல்லும் பெண் ஆளுக்கு 12 மணிநேரம் பணியாற்றினால் ரூ.750-ம் அதே ஆண் ஆளுக்கு ரூ.850 கூலி கொடுக்கப்படுகிறது.
அது கூட அவர்கள் பணிக்கு வந்தால் தான் கூலி கிடைக்கும். அதுமட்டுமின்றி செக்கு மாடு போல் உழைக்கவேண்டும் தெரியுமா உங்களுக்கு?
அரசாணை 243 என்பது விரும்பிய இடத்துக்கு பணிமாறுதலை கேட்கும் ஆசிரியர், தலைமையாசிரியருக்கு சீனியாரிட்டி கைவிட்டு போகும் என்பது தானே. அதற்கெல்லாம் கட்டுபடமாட்டோம் என்று அரசை இப்படி மிரட்டுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவ்வளவு போராட்டம் பண்றீங்களே உங்க பிள்ளைகளை அரசு பள்ளியிலேயோ அரசு கல்லூரிகளிலேயோ சேர்த்து படிக்கவைக்கிறீர்களா? முதல்ல உங்களுக்கு கொடுக்கப்பட்ட அரசு பணியை ஒழுங்காக கவனியுங்க. அப்புறம் அரசு தன் கடமையை செய்யும். இல்லைன்னா?!
இந்நிலையில், ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 100 மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆசிரியர்கள் ஆசிரியர்களின் பணத்தை தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தி வருவதாகவும் இந்த போக்கை கண்டிப்பதாகவும் ஆசிரியர்களை கேவலமாக நடத்துவதாகவும் பாதாளத்தில் தள்ளும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு முன் வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வினை வழங்கிட வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம்,
அதே போல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வினை வழங்கிட வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.