புரோக்கர் கட்டியுள்ள ஒன்னரை கோடி மதிப்புள்ள கட்டிடம்! ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

கு.அசோக்,
காட்பாடி அருகே வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் - லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனைகணக்கில் வராத ரூ 95 ஆயிரம் பறிமுதல். ஒன்னரை கோடியில் கட்டிடம்கட்டியிருக்கும் புரோக்கர்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடி இயங்கி வருகிறது.
இங்கு நேற்று அதிகாலையில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது வட்டாரப் போக்குவரத்து சாவடியின் அலுவலகத்தில் இருந்த 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அங்கு பணியில் இருந்த அலுவலர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் கொஞ்சம் கவனியுங்களேன்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர்களுக்கான அலுவலக கட்டிடம் உள்ளது. அந்த இடத்தை ஒரு புரோக்கர் ஆக்கிரமித்துக் கொண்டு அவரே பிரேக் இன்ஸ்பெக்டரை போல் பாவித்து செயல்பட்டு வருகிறார்.
இது மூத்த அதிகாரிக்கும் தெரியும். பல்வேறு பணிகளுக்காக அந்த அலுவலகத்தை நாடுபவர்களிடம் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பணம் பறித்து வரும் அந்த புரோக்கர் தற்போது சுமார் ஒன்னரை கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டியுள்ளாராம்.
அது சரி.