போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்!

ஆர்.பாலஜோதி,
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்களின் என்று வெளியாகியுள்ள செய்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நவநீதகிருஷ்ணன் என்பவர் அவரது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்..*
* கன்னியாக்குமரி மாவட்டம் - தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் நேற்று இரவு ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர்.
* இதை கண்டு அங்கிருந்தவர்கள் இவர்களிடம் விசாரித்தும் திமிராக பேசியும் போதையில் தள்ளாடியுள்ளனர்.
* தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்களில்) விதிகள் 2003, விதி எண். 11 ஏ-யின் படி, 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது என முன்பு அறிவிப்பு பலகை எல்லாம் வைக்கப்பட்டது..
* இப்போது இந்த நடைமுறை உண்டா என தெரியவில்லை. டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூட சிறார்களுக்கு மது விறபனை செய்கிறார்கள்.
* இப்படி மது குடித்து சீரழியும் சிறார்கள் போதையில் பல குற்ற செயலில் ஈடுபட்ட செய்திகள் அன்றாடம் வருகிறது.
* சமீபத்தில் கூட சிவகாசி மாவட்டம் - திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுபோதையில் வந்த பிளஸ் 2 மாணவர்களை தட்டி கேட்ட ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைப்பு;
* மது பாட்டிலால் தாக்கிய 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை என்ற செய்தி வெளியானது.
* அதேபோன்று காவல்துறையினர் கடுமையான வாகன சோதனைகள் இட்டும், அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து மதுபோதையில் பைக் ஓட்டி விபத்தாகி உயிரிழப்பும் ஏற்படும் வருந்ததக்க செய்திகளை காணுகிறோம்.
* சமூக பொறுப்பு அனைவருக்கும் வரவேண்டும், டாஸ்மாக்கில் சிறார்களுக்கு மது விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* *மது பார்களில் சிறுவர்களை அனுமதிக்க கூடாது. மீறி அனுமதிக்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏநவநீதன் என்பவரின் எக்ஸ் பதிவில் சுட்டது.