அடுத்த மாதம் சம்பளம் வாங்கும் போது பஞ்சமி நிலம் உங்கள் கண் முன்வருமா ஆபிசர்ஸ்!

ம.பா.கெஜராஜ்,
பஞ்சமி நிலத்தை மீட்கும் போராட்டத்தை பேர்னாம்பட்டைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் பொன். குணசீலன்அவர்கள் கடந்த10 வருடங்களாக நடத்திவருகிறார். இதற்காக அவர் பல அமைப்புகள் மற்றும் கட்சிகளின் வாயிலாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26-09-2023 தாசில்தார் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் பேர்னாம்பட்டு வட்டம் மாச்சம்பட்டு பாலூர் மிட்டப்பள்ளி பக்காலபள்ளி அரவட்லா தொட்டித்துரை மேட்டூர்
பத்தலபள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள நிலம் எங்கள் மனுக்களை சரி பார்த்து இது பஞ்சமி நிலம் விதி மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
அத்துடன் இதை நாங்கள் 10 நாட்களுக்குள் அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம் இது பஞ்சமி நிலம் தான் என பொதுமக்கள் முன்னிலையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சொன்னதை இதுவரை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
எபவே 07-11-2023 அன்று பஞ்சமி நிலங்கள் உள்ள நிலத்தில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டது. அப்போது கோட்டாட்சியர் வெங்கடராமன் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் எங்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தினர். முடிவில் தீபாவளி கழித்து10 நாட்களுக்குள் பஞ்சமி நிலங்களை அளந்து மீட்டு தருகின்றோம் என உறுதி அளித்தனர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
தொடர்ச்சியாக 12-03-2024 அன்று ஏர் உழும் போராட்டம் நடைபெற்று நிலத்தை ஏர் உழுது விதை விதைக்கப்
பட்டது. அதற்காக, பேர்ணாம்பட்டு காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் சுமார் 100 பேரை கைது செய்தனர். அது சமயம் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் திரு விநாயகமூர்த்தி அவர்கள் நாங்கள் உழுத நிலத்தில் நேரில் வந்து விசாரணை செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால். தேர்தல் முடிந்தவுடன் எங்களுக்கு விதி மீறப்பட்டுள்ள நிலத்தை கையகப்படுத்தி எங்களிடம் ஒப்படைப்பதாக கூறினார்.
அதன் பின்னரும் பட்டா சிட்டாவில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட பெயர்களை நீக்கவில்லை.
மற்றும் 02-06-2025 அன்று கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இன்னும் விசாரணை இல்லை.
பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்ள் மீது எஸ்.சி.,எஸ்டி வழக்கில் இதுவரை கைது செய்யவில்லை.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு போராட்டம் தான் வாழ்க்கையா? என்று குணசீலன் கேள்வி எழுப்புகிறார்.
ஹலோ ஆபிசர்ஸ் இந்த மாதம் சம்பளம் வாங்கும் போது இந்த கோரிக்கைகள் உங்கள் நினைவில் வருமா?