அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்த சமுதாயக் கூடம்!
ஜி.கே.சேகரன்,
புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூட கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், விஷமங்கலம் ஊராட்சி, அங்கநாத வலசை கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் (2024-2025) ரூ.26,50,000 மதிப்பீட்டில் சமுதாயகூட கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறை முகங்கள் அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி சமுதாயக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றி
துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி,தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா வினோத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

admin
