எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனைவிட படிப்பு கம்மிதான்! பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பேட்டி!
ஜி.குலசேகரன்,
அவர் நல்ல படித்த பண்பாளர். அவரைவிட குறைவாக உள்ள எடப்பாடியை ஏற்றுக்கொள்ள செங்கோட்டையணுக்கு மனமில்லை - முதலமைச்சர் கையில் உள்ள சட்டம் ஒழுங்கு இன்று கொலை கொள்ளை பாலியல் என தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் வெளிப்பாடு மக்கள் மத்தியில் எழுந்து 2026 இல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
எடப்பாடியாரை ஏற்றுக்கொள்ள செங்கோட்டையணுக்கு மனமில்லை. இதுதான் செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு காரணம். ஏற்றுக்கொள்ள மனமுள்ளவன் தான் சிறந்த அரசியல் தலைவர் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவரே தள்ளப்படுகிறார். வாணியம்பாடி அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் மாவட்ட அலுவலக திறப்பு விழாவின்போது கட்சியின் மாநில தலைவர் பி.வி.கதிரவன் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், மாநில துணைத்தலைவருமான முன்னாள் எம்.எல். ஏ பி.வி.கதிரவன் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி.வி.கதிரவன், அதிமுக மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குள்ள ஒரு கட்சி அந்த கட்சியில் இருந்து சிலர் வெளியே சென்றுள்ளார்கள், சிலர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
அதே போன்று பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு வருவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
எம்ஜிஆர் 1972 ஆண்டு கட்சி தொடங்கியது முதலே செங்கோட்டையன் அந்த கட்சியில் இருந்து வருகிறார். அவர் நல்ல படித்த பண்பாளர். அவரைவிட குறைவாக உள்ள எடப்பாடியை ஏற்றுக்கொள்ள செங்கோட்டையணுக்கு மனமில்லை. இதுதான் செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு காரணம்.
ஏற்றுக்கொள்ள மனமுள்ளவன் தான் சிறந்த அரசியல் தலைவர் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவரே தள்ளப்படுகிறார்.
ஒன்றிணைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு பழனிச்சாமியை முதலமைச்சராக கூடாது என்று நினைத்து கொண்டு, அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் வழி நடத்திய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை மறந்த தனி நபர் அந்த கட்சியில் இருக்க முடியாது.
அதுதான் இன்று நடந்துள்ளது வாணியம்பாடி அடுத்த வலியாம்பட்டு பகுதியில் இரவோடு இரவாக திறக்கப்பட்ட டாஸ்க் மார்க் கடையை உடனே மூட வேண்டும்.திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கையாளுகின்ற முதலமைச்சர் கையில் உள்ள சட்டம் ஒழுங்கு இன்று கொலை கொள்ளை பாலியல் என தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் வெளிப்பாடு மக்கள் மத்தியில் எழுந்து 2026 இல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி திருநெல்வேலி உட்பட மூன்று பகுதிகளை கேட்கின்றோம். என தெரிவித்தார். அப்போது அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் டீல் பாஸ்கர், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

admin
