தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்! போலீசை பார்ரத்தும் தப்பி ஓட்டம்!
கு.அசோக்,
தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம், அரக்கோணத்தில் சிற்றுண்டி கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கியதால் பரபரப்பு, தொடரும் இவர்களது செயலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை*
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெரு மூச்சு பகுதியில் பாபு ரவி என்கிற சகோதரர்கள் சிற்றுண்டி கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அரக்கோணம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்சியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வியாபார வளர்ச்சிக்காக ரூபாய் 50,000 கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தக் கடனுக்கான மாத தவணை முறையாக கட்டி வந்ததாகவும், கடைசி தவணையான 3200 கணக்கு வழக்குகளில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக கடைசி தவணை நிறுத்தி வைக்கப்பட்டதை குறித்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி பாபு மற்றும் ரவி கடைக்கு வந்து கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை சிற்றுண்டி கடைக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பாபு மற்றும் ரவி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குவாதம் முக்கிய நிலையில் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கி அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக அவசர காவல் என் 100க்கு புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்து தனியார் நிறுவன ஊழியர்கள் தப்பித்துச் சென்றனர்.
தொடர்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியத்தால் பல்வேறு பகுதிகளில் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் சில பகுதிகளில் மரியாதை குறைவாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நடந்து கொள்வதால் அவமானத்தால் சிலர் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் அவல நிலை நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
எனவே தமிழக அரசு இதுபோன்ற நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தற்போது கோரிக்கையானது வலுத்து வருகிறது.

admin
