ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட தார் சாலை சேதம்!
ஜி.கே.சேகரன்,
ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்! சீரமைக்காவிடில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பட்டு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் பெருமாப்பட்டு பகுதியில் இருந்து ஜடையனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இங்கு உள்ள தார் சாலை மிகவும் குண்டும் குழியமாக உள்ளது என கூறி அப்பகுதி மக்கள் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர்.
அதன் காரணமாக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2024 மற்றும் 2025 ஆண்டிற்கான மூன்று கிலோமீட்டர் அளவிலான தார் சாலை 1கோடியே 33 லட்சம் மதிப்பில் கடந்த ஒன்றாமாதம் பணி துவங்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தார் சாலை அமைக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் ஜடையனூர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக தரமற்ற முறையில் இருந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட தார்ச்சலை குண்டும் குழியுமாக மாறிய நிலையில் ஒப்பந்ததார் எந்த அளவிற்கு இந்த தார் சாலையை அமைத்திருப்பார் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மேலும் இந்த தார் சாலையை சீரமைக்கப்படாவிடில் பொதுமக்களை ஒன்று திரட்டி கூடிய விரைவில் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.

admin
