காலை பிடித்துக் கொள்கிறேன் மரத்தை வெட்ட அனுமதி கொடுக்காதீங்க!

காலை பிடித்துக் கொள்கிறேன் மரத்தை வெட்ட அனுமதி கொடுக்காதீங்க!

ஜி.கே.சேகரன்,

காலை பிடித்துக் கொள்கிறேன் மரத்தை வெட்ட அனுமதி கொடுக்காதீங்க விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி கடும் வேதனை.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

  இந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கை குறை நிறைகளை குறித்து பேசப்பட்டது.

   அப்போது அம்பலூர் பகுதியை சார்ந்த அசோகன் என்பவர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பார்த்து உங்களது காலை பிடித்துக் கொள்கிறேன் தயவுசெய்து மரங்களை வெட்ட அனுமதி கொடுக்காதீங்க,  அதற்கு பதிலாக மரத்தை வேறு இடத்தில்  நட உத்தரவிடுங்கள்.

  மேலும் அதற்கு உண்டான தொகையை கணக்கீடு செய்து கொடுங்க எனவும் ஆதங்கமாக பேசினார்.

  இந்த கூட்டத்தில் ஒரு சில விவசாயிகள் நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும்  கணத் தினங்களாக பெய்த மழையின் காரணமாக நாசமாகியதாகவும் இதனால் போட்ட முதலீடு கூட எடுக்கமுடியாமல் திணறி வருவதாகவும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

   அதேபோல் விவசாயிகள் வாழ்வாதாரமாக விளங்க கூடிய தென்னைமரம் குருத்து பூச்சியால் பாதிக்கப்பட்டு  வருகின்றது உடனடியாக மாவட்ட நிருவாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மரத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை முன் வைத்தனர்.

  விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்

இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை , தோட்ட களை துறை, மின் துறை,தீயணைப்பு துறை. காவல் துறை உள்ளிட்ட துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.