சமூக நீதி மாணவர் விடுதியை ஆய்வு செய்த சட்டமன்ற குழு!

சமூக நீதி மாணவர் விடுதியை ஆய்வு செய்த சட்டமன்ற குழு!

கு.அசோக்,

வேலூர்மாவட்டம்,வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு  தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கள ஆய்வு  செய்தது.  இதில் வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள சமூக நீதி மாணவர் விடுதி,செதுவாலையில் பன்னை குட்டைகள் ,காட்பாடி ரயில்வே மேம்பாலம் மற்றும் காட்பாடி தீயணைப்பு நிலையம் ,சர்க்கார் தோப்பு சுத்திகரிப்பு நிலையம்,ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

  இந்த ஆய்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மற்றும் பொது க்கணக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி,   சந்திரன்,ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்

    பின்னர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுக்கணக்குழு ஆய்வு கூட்டம் செல்வபெருந்தகை தலைமையில் நடந்தது இதில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்