வீட்டு சிலிண்டரை கடைக்கு பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது!
கு.அசோக்,
சோளிங்கரில் வீட்டு உபயோக சிலிண்டரை¢ பயன்படுத்திய கடைகளில் இருந்து 31 சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டுக்கு பயண்படும் சிலிண்டரை வியாபார ரீதியாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பறக்கும் படை தாசில்தார் எச்சரித்தார்.
சோளிங்கர் நகரப் பகுதியில் கடைகளில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்கள் பயன்படுத்தி வியாபாரம் செய்வதாக வட்ட வழங்கல் துறை பறக்கும் படை தாசில்தார் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சோளிங்கர் பேருந்து நிலையம் கொண்ட பாளையம், கருமாரியம்மன் கோவில் கூட்ரோடு, அண்ணா சிலை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்திய கடைகளில் இருந்து 31 சிலிண்டர் பறிமுதல் செய்தனர்.
வீட்டுக்கு பயன்படும் சிலிண்டர் பயண்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

admin
