விஜய் கூட்டத்துக்கு வந்தவர்களில்39 பேர் பலி! எண்ணிக்கை உயரும் அபாயம்! போலீஸ்தடியடி! கைது நடக்குமா?

விஜய் கூட்டத்துக்கு வந்தவர்களில்39 பேர் பலி! எண்ணிக்கை உயரும் அபாயம்! போலீஸ்தடியடி! கைது நடக்குமா?

ம.பா.கெஜராஜ்,

  (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வுருகிறது)  

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர்.  முதலில், விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், பலர் ஆபத்தான

நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உயிரிழந்ததில் 3 குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

  இந்நிலையில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

   இந்நிலையில், விஜய் பரப்புரையில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

   கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர்.

   முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.

  அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

  இந்நிலையில் நாளை முதலமைச்சர் முகஸ்டாலின் கரூர் விரைகிறார்.

 இது ஒரு பக்கம் இருக்க இந்த பலிகளுக்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரிக்கப்படவிருக்கிறது. விஜய் பிரச்சாரத்துக்கு தவெக சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்ட பொழுது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

  அந்த நிபந்தனைகளை தவெகவும் பின்பற்றிய நிலையில் அங்கு நடந்த தடியடியும் நடந்துள்ளது.

எது எப்படியிருப்பினும் இந்த கோர பலிகள் நாட்டையே உலுக்கிவிட்டது. இதில் தவெகவினர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

  தற்போது தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைப்பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

  இந்த சோக சம்பவத்தினால் தவெகவின் எதிர்காலம், பின் விளைவுகள், ஆக்ஷன் மற்றும் ரி ஆக்ஷ்ன் தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து உங்கள் www.livelook.in ல் இடம் பெறும்.  

இந்த விபத்து  ஏற்பட்டது எப்படி என்கிற உண்மை நிலவரங்களை ஆராய தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து இருக்கிறது.

அதற்காக முன்னாள் நீதி அரசர் அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி,

இந்த கோர விபத்தை அறிந்த துபாயில் இருந்த துணை முதல்வர் உடனடியாக  கரூர் வந்துள்ளார்.

அவர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த  உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்.

 எடப்பாடி பழனிச்சாமி. 

அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. த. வெ. க. உடைய

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஈபிஎஸ் 

அரசு முழுமையான பாதுகாப்பு கொடுக்கத் தவறியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 

“ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி - எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாக இருக்கக்கூடாது“ 

"அதிமுக கூட்டத்திலும் பாதுகாப்பு குறைபாடு
முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்“ 

அரசாங்கமும், காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .

முந்தைய கூட்டத்தில் அதிகம் கூட்டம் கூடுவதை பார்த்த அரசு நாமக்கல் கூட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். 

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தில் முந்தைய தினம் குடித்தது விஷ சாராயம் அதை யாரும் அருந்த வேண்டாம் என்று அரசு உரிய தகவலை வெளியிட்டிருந்தால் மறுதினம் கொத்துக்கொத்தாக யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பிரேமலதா விஜயகாந்த். 

தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவிக்கையில் மரணத்தில் அரசியல் பேசக்கூடாது இந்த களத்தை அரசியல் ஆக்க கூடாது என்று கூறியிருக்கிறார் அதேபோல் பாதிக்கப்பட்டவருக்கு களத்தில் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குறுகிய இடத்தில் அரசியல் கூட்டம் நடத்துவதற்கு எப்படி முடிவு செய்தார்கள். 

அதேபோல் தமிழகத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை என்று சொன்னார்

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

பின்னர் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த கொடூர சம்பவத்துக்கு உடனடியாக யாரையும் குறை சொல்லி விட முடியாது.

இருந்தபோதும் உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள அமர்வு இதை விசாரிக்க வேண்டும்  என்று சொன்னார்.