யானை வழித்தடங்களில் பள்ளங்கள்! கனிமவள கொள்ளையர்களால் ஆபத்து! திருப்பத்தூர் அதிகாரிகள் கவனிப்பார்களா?
ம.பா.கெஜராஜ்,
மண் திருட்டு காரணமாக ஏற்பட்ட பள்ளங்களில் காட்டு யானைகள் விழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மண் கடத்தலுக்கு பஞ்சமே கிடையாது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை மாமுல் செலுத்திவிட்டு இப்படி கனிமவளங்களை கொள்ளையடிப்பதினால் பல இடங்களில் பள்ளம், குழி ஆகியவை ஏற்பட்டிருக்கின்றன.
குறிப்பாக நட்றம்பள்ளி பகுதிகள் தனியார் இடங்களிலும், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும் இந்த மண் திருட்டு நடந்து வருகிறது.
கனிமவள கொள்ளையர்கள் ஏற்படுத்தியிருக்கும் அந்த பள்ளங்கள் யானைகளின் வழிதடங்கள் என்பதால் அவற்றில் யானைகள் விழும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கிருஷ்ணகிரியில் இருந்து 7 யானைகள் கூட்டமாக வந்துள்ளது.
அந்த யானைகள் மண் குழிகளில் விழாமல் இருக்க பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டியிருக்கிறார்கள்.
அதனை அறிந்த வாணியம்பாடி வனத்துறையினர் ஓடோடி வந்து களமிறங்கினர். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதிக்கு அந்த யானைக் கூட்டம் சென்றுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், பேர்னாம்பட்டு மலைப்பாதையில் உள்ள ஆந்திர மாநில எல்லையான நாயக்கனேரி காட்டு வழியில் அந்த யானைகள் கடந்து சென்றன.
மாலை சுமார் 7 மணியளவில் அவை கூட்டமாக சென்றதால் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையும், கனிமவளத்துறை மற்றும் வனத்துறையினர் இதில் தலையிட்டு சீர்படுத்த வேண்டும். குறிப்பாக நாட்றாம்பள்ளியில் யானை வழித்தடங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பள்ளங்களை நிரப்புவதுடன், மேலும் கனிம வளக்கொள்ளையர்கள் பள்ளம் எடுக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பொது நலவிரும்பிகள்.
நடக்குமா?

admin
