பலே வி.ஏ.ஓ.... பட்டா ஆசைக்காட்டி பல லட்சம் லஞ்சம்!

பலே வி.ஏ.ஓ.... பட்டா ஆசைக்காட்டி பல லட்சம் லஞ்சம்!

ஜி.கே.சேகரன்,

 மேல்பாடி அருகே எருக்கம்பட்டு ஊராட்சியில் வீட்டு மனை கேட்டு பட்டா விண்ணப்பத்தவர்களிடம் விஏஓ பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சியில் பாலாஜி என்பவர் விஏஓவாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அப்பகுதியில் பணிபுரிந்த போது வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அரசு புதிதாக எருக்கம்பட்டு ஊராட்சி ராஜப்பன் நகர் பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க உள்ளதாக கூறி பலரிடம் தலா ரூ.20 ஆயிரம் வசூலித்ததாக கூறப்படுகின்றது.

 பின்னர் விஏஓ பாலாஜி திருவலம் அடுத்த 65 புத்தூர் பகுதிக்கு கடந்த 6மாதங்களுக்கு முன் மாறுதலாகி  சென்றுள்ளார்.

  இதனை அடுத்து எருக்கம் பட்டு ஊராட்சி சின்னப் பெருமான் குப்பம் பகுதியைச் சேர்ந்த பணம் கொடுத்து ஏமார்ந்த பொதுமக்கள் விஏஓ பாலாஜியிடம் பலமுறை பணம் கேட்டு முறையிட்டுள்ளனர்.

 ஆனால் பாலாஜி இதனை கண்டு கொள்ளவில்லை என கடந்த வாரம் மேல்பாடி போலீசில் புகார் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் விஏஓ பணிபுரிந்த பாலாஜி வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறி சுமார் 2 லட்சம் பணம் வசூலித்துக் கொண்டு ஏமாற்றுவதாகவும். இதன் பேரில் நடவடிக்கை எடுத்து பணம் வசூலித்து பொதுமக்களிடம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். 

   இதனை அறிந்த பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் காவல் நிலையத்தில் ஆஜராகிய பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் மேல்பாடி காவல் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.