பணக்காரரிடம் மோதாதே? ஜல்லி கல்குவாரியை மூட கோரி மக்கள் சாலைமறியல் !

பணக்காரரிடம் மோதாதே? ஜல்லி கல்குவாரியை மூட கோரி மக்கள் சாலைமறியல் !

 கு.அசோக்,

  இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நந்தியாலம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் கிராம அருகிலேயே இலான் கம்பெனி ரெடிமிக்ஸ் மற்றும் மற்றும் கல் குவாரிகள் இயங்கி   வருகின்றன.இதிலிருந்து ஜல்லி மணல் ஏற்றி வரும் இரவு ஏற்றிக்கொண்டு இரவும் பகலும் ஓயாமல் சென்று கொண்டு இருப்பதால் முழுவதும் தூசி படிந்து மக்கள் தூங்க முடியாத அவல நிலை உள்ளது.

  மேலும் கனரக லாரிகள் தெருவில் சென்று கொண்டே இருப்பதால் மக்கள் நடமாட முடியவில்லை. சிறு பிள்ளைகள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், நடக்க முடியவில்லை.

 தெருவில் உள்ள மின் ஒயர்களை தாழ்வான பகுதியில் தொங்கிக்கொண்டு உள்ளன.  தொடர்ந்து  லாரிகள் சென்று கொண்டே இருப்பதால் மின் இணைப்பு மின் மற்றும் வயர்களை அறுத்து செல்கின்றனர். 

  சரியான முறையில் சாப்பிட முடியவில்லை, அனைத்து பொருட்களின் மீதும் தூசி படிந்துள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

  இந்த சம்பவம் தொடர்பான மாவட்ட ஆட்சியர் இடத்தில் பலமுறை மனு மனு கொடுத்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. லாரிகளை மடக்கி சாலை மறியலில் ஈடுபட்டோம் ரத்தனகிரி போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உங்கள் மீது கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவோம் பணக்காரன் இடம் மோத கூடாது? அதில் பின் விளைவுகள் அதிக மோசமாக உங்களுக்கு இருக்கும் என்று எங்களை மிரட்டுகின்றனர்.

 மேலும், கம்பெனிக்கு இளான் ரெடிமிக்ஸ் கம்பெனிக்கு இடம் கொடுத்த தயாளன் நாங்கள் அவரிடத்தில் பணம்  கேட்டதாக சொல்லி பொய் கேசு கொடுத்து மிரட்டுகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

  கம்பெனி செயல்படுவதற்கு ஊராட்சியில் முறையாக அனுமதி பெறவில்லை. இதனை கேட்டால் நாங்கள் பெரிய அதிகா£கள் மற்றும் வேண்டியவர்களை பார்த்து அனுமதி பெற்று விட்டோம் என்று சொல்கின்றனர் என குமுறும் அப்பகுதிவாசிகள்துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து எங்கள் தெருக்களில் தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.