அரசியல்வாதியின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற பயங்கரம்! வாணியம்பாடி பரபரப்பு!

டி.முகமது இர்பான்,

 அரசியல்வாதியும், சமூக சேவகருமான வசீம் அக்ரம் என்பவரை மர்ம மனிதர்கள் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்கள். போகும் போது கையோடு தலையையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில்  இன்று மாலை சுமார் 7 மணியளவில் அரசியல்வாதியும், சமூக சேவகருமான வசீம் அக்ரம் என்பவரை மர்ம மனிதர்கள் தலையை வெட்டி கொலை செய்தனர்.

வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் வாணியம்பாடியில் சமூக ஆர்வலரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைசெயலாளராகவும் உள்ளார். ஏற்கனவே கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார் 

 இவரை ஜீவா நகர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்கள் தலையை துண்டித்து எடுத்து சென்றதால் மக்கள் மத்தியில் கொந்தலிப்பு ஏற்பட்டிருக்கிறது.ஜீவா நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு தனது ஏழுவயது மகன் ஆசாசுடன் தொழுகைக்கு சென்று தொழுதுவிட்டு தனது வீட்டிற்கு பள்ளிவாசலில் இருந்து நடந்து வந்துகொண்டிருந்தார் அப்போது ஒரு மர்ம கும்பல் சுமார் ஆறு பேர் மறைந்திருந்து அவரை கொல்ல முயன்ற போது அவர் மகனைவிட்டுவிட்டு தப்பி ஓடிவருகிறார் இருந்தாலும் 6 பேர் கொண்ட கொலை கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்து தலையை துண்டித்தனர்

கொலையாளிகள்  காரில் வந்ததாக கூறப்படுகிறது.

  இவருக்கு ஏற்கனவே கொலைமிரட்டல் இருந்ததாக வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளரிடம் வசீம் அக்ரம் புகார் தெரிவித்திருந்தாராம்.ஆனால் ஆய்வாளர் அதைப்பற்றி கண்டு கொள்ளாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை நடந்த போது "அல்லா உ அக்பர்" என்று வசீம் அக்ரம் கடைசி வரை சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த கொடூர காட்சியை ஒரு பெண் சம்பவ இடத்துக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

 இந்த சம்பவத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது வீடியோவில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்தவுடன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூடுதல் பொறுப்பாக கவணிக்கும் வேலூர் எஸ்பி செல்வகுமார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார் கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாணியம்பாடியில் பதட்டம் நிலவுகிறது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.