அடிக்கடி கொலை நிகழும் திருப்பத்தூர் மாவட்டம்!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி படுகொலைகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை மூன்று கொலைகள் கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது.
ஆண்டு தொடங்கியவுடன் ஏலகிரிமலையில் வயதான மூதாட்டி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து புதூர் நாடு செல்லும் வழியில் து.புள்ளியூர் பகுதியில் கணவன் மனைவி வெட்டப்பட்டனர். அதில் மனை இறந்துவிட்டார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே ஒரு கொலை நடந்திருக்கிறது.
ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் திம்மராயன்(48) ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய அக்கா மகன் மற்றோரு சக்கரவர்த்தி என்பவர் தனது மூன்று ஏக்கர் நிலத்தை 38 லட்சத்திற்கு பைனான்சியரிடம் அடகு வைத்துள்ளதாக தெரிகிறது.
இதனை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திம்மராயன் அந்த பைனான்ஸ் நபர்களிடமிருந்து வாங்கி தனது பெயரில் மாற்றியுள்ளார்.
இதன் காரணமாக சக்கரவர்த்தி மற்றும் திமராயன் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை போலீசார் தப்பி ஓடிய சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக சொந்த மாமனையே மச்சான் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் நேர்மையான அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், பொதுமக்கள் பிரச்சனைகள் தொடர்பாக காவல் நிலையத்தை அனுகும் போது, அவர்களுடைய பிரச்சனைகளை பைசல் கும்பல்கள் மூலம் தீர்த்துவைக்காமல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற கொலைகள் நடக்காது என்கிறார்கள்.
கொலை மட்டுமல்ல பல குற்றச்சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் பல பைசல் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் இரண்டு அலுவலக நபர்களினால் சட்டவிரோதமாக தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.

admin
