திருப்பத்தூர் கலெக்டர் கண்டுகொள்வாரா?!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் தாமலேறி முத்தூர் போவதற்காக பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலம் ஏற்னவே வாகன ஓட்டிகளை வெகுவாக குழப்பும் விதமாக அமைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது
அப்படியிருக்க இந்த பாலத்தின் முகப்பில் உள்ள இடது புறத் துணை யாரோ இடித்து தள்ளி இருக்கிறார்கள்.
இடிக்கப்பட்ட அந்தப் பாலத்தின் தூண் பகுதிகள் சாலையில் சிதறி கிடப்பதால் போக்குவரத்திற்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது.
அதன் அருகிலேயே பெரிய பேக்கரியும் மளிகை கடையும் உள்ள நிலையில், அங்கு வந்து செல்பவர்களின் வாகனங்கள் அருகில் வரிசைக்கட்டி நிற்கவைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களாக சிரமங்கள் ஏற்பட்டுவருகின்றன.
இடித்து தள்ளப்பட்ட அந்த தூணின் பாகங்களை அகற்றி சேஃடியாக வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆட்சியர் வரைக்கும் தெரிவித்தும் இரண்டு நாட்களாக அந்த பகுதியில் எப்போது ஏது நடக்கும் என்று பரிதவிப்பாக உள்ளது. (முந்தைய கலெக்டர்களுக்கு இப்படிப்பட்ட தகவலை மெஸேஜ் செய்தால் உடனடியாக நடவடிக்கை பாய்ந்து பிரச்சனை சீராகும்).
ஆகவே தயவு செய்து தாங்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
இது ஒருபக்கம் இருக்க திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த குரங்கு கூட்டம்! வெளிய வர முடியாமல் பயந்து ஓடிய அதிகாரிகள் என்று செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும் ஒரு நாளைக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆறாவது மாடி கட்டிடம் மற்றும் ஏழாவது மாடி கட்டிடத்தில் குரங்குகள் கூட்டம் ஆக்கிரமிப்பு செய்து அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றன.
மாடி படிக்கட்டின் அருகே கூட்டம் கூட்டமாக குரங்குகள் அமர்ந்திருந்தன. இதன் காரணமாக உள்ளே இருக்கும் அதிகரிகள் குழு வெளியே வர முடியாமல் தெரித்து ஓடினர்.
இவற்றையெல்லாம் கலெக்டர் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

admin
