நாய் குளிப்பதற்கு வசதி செய்துள்ள நகராட்சி!

நாய் குளிப்பதற்கு வசதி செய்துள்ள நகராட்சி!

ஜி.கே.சேகரன்,

 நகராட்சி சுகாதார சீர்கேடு. குப்பை கழிவு நீரில் ஜாலியாக குளித்த நாய். குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-ஆவது வார்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அருகே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

  அந்த குப்பை கழிவுநீர் கால்வாயில் அடைத்துக் கொண்டு  குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

  சரிவர கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பள்ளம் நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.அந்தப் பள்ளத்தில் தெரு நாய் ஒன்று ஹாயாக படுத்துக்கொண்டு உள்ளது.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை ஆணையாளரிடம் மனு  கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

  கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தையும் சரி செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..