புதிய எஸ்பி காட்டிய அதிரடி!
ஜி.கே.சேகரன்,
புதியதாக பொறுப்பேற் பெண் எஸ்பி தலைமையிலான போலீசார் 130 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அகற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் தொடர் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட எஸ்பி வி.சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி தலைமையிலான போலீசார் மலை பகுதிகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது பிளாஸ்டிக் பேரல்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 130 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி சாராய ஊறலை அழித்தனர்.

ஆனால் சாராயம் காய்ச்சுபவர்கள் தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை எஸ்.பி. அவர்கள் முடுக்கிவிட்டிருக்கிறார்.

admin
