தவெக தலைவர் நடிகர் விஜய் பிரதமருக்கு வாழ்த்து!

ஜி.சாந்தகுமார்,
மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுக் கொண்ட மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்ட திரு. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.