ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியின் புகைப்படம் மார்பிங்! ஐவர் கைது!

ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியின் புகைப்படம் மார்பிங்! ஐவர் கைது!

ஜி.கே.அசோக்,

ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்து  மிரட்டி வந்த இளைஞர் உட்பட  5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருடன்  முகநூல் வலை பக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கலையரசன் என்பவர் நண்பராக இணைத்து கொண்டுள்ளார்.

  பின்னர் பள்ளி மாணவியை உன்னுடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனவும் பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார்.

  ஒரு கட்டத்தில் மாணவியின் போட்டோவை மார்பிங் செய்து அவரது நண்பர்கள் ஐந்து பேருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

  இதனை அறிந்த மாணவி அழுது கொண்டு பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

  இதனை தொடர்ந்து பெற்றோர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  மேற்படி மாணவியிடம் முகநூல் பக்கத்தில் நண்பராகி மாணவியின் போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டி வந்த கலையரசனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரது நண்பர்களான பூங்குளம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் ,சந்தோஷ் மற்றும் சிறுவர்கள் இரண்டு பேர் என  5 பேரை கைது செய்தனர்.

  ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

பதிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர்கள் இரண்டு பேரை சென்னையில்  உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.