கைது செய்யப்படுவாரா அரசு மருத்துவர்!
ஜி.கே.சேகரன்,
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் அதே மருத்துவமனையில் பணியாற்றுபவருக்கு பாலியல் தூண்டில் வீசியுள்ளார். இரவில் போன் செய்து உள் அர்த்தத்துடன் பேசி அழைப்பு விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த திருச்சி பெண், இது பற்றின புகாரை மருத்துவமனை நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அளித்துள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அந்த நபர் விசாரிக்கப்பட்டாராம்.
இந்நிலையில் புகார்தாரரை செட்டில் செய்து மேட்டர் பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்ள முயற்சிகள் நடந்து வருகிறதாம். குறிப்பாக புகார் காவல் துறை பக்கம் போகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதாம்.
குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் வேலூர், வேலப்பாடியில் சொந்தமாக மருத்துவமனையும் நடத்திவருகிறார்.
ஆளும் கட்சியின் பவர் சப்போர்ட்டில் உள்ள அவர் மகாத்மாவின் பெயரை வைத்துக் கொண்டு இப்படி நடந்து கொள்ளலாமா என்று சக மருத்துவர்கள் வினவுகிறார்களாம்.
எது எப்படியாயினும் தற்போது புகாரை பெற்று விசாரித்துவரும் அதிகாரிகள் கட்டபஞ்சாயத்துக்கு கட்டுபடாமல் இந்த விஷயத்தை காவல் துறைக்கு பரிந்துரைப்பதில் மும்முரம் காட்டி வருவதாக தகவல்.
வெரி குட்....,
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது.

admin
