செவிலியர்கள் சமூக சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்!

செவிலியர்கள் சமூக சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்!

கு.அசோக்,

செவிலியர் மாணவிகள் சமூக சேவை மனப்பான்மையுடன் கடுமையாக உழைக்க வேண்டும் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கான விளக்கேற்றும் விழாவில்  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஹினி  தேவி பேச்சு

 வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள நாராயணி மண்டபத்தில் நாராயணி செவிலியர்கள் கல்லூரியில் பி.எஸ்.சி மற்றும் டிப்ளமோ நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள் விளக்கேற்றும் விழாவானது நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

 இதில் நாராயணி கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோரும் பெற்றோர்களும் மாணவிகளும் பங்கேற்றனர்.

அப்போது செவிலியர் கல்லூரி மாணவிகள் விளக்கேற்றும் நிகழ்ச்சியானதும் நடைபெற்றது

 இவ்விழாவில்   சிறப்பு அழைப்பாளராக  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஹினி தேவி கலந்துகொண்டு பேசினார்.

 அதில் செவிலியர் படிப்பு என்பது சமூக சேவைக்கானது நீங்கள் எந்த நாளும் விடுமுறை எடுக்காமல் பாடங்களை நன்றாக படித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.

  கடுமையாக உழைத்து மேன்மேலும் உயர் படிப்புகளுக்கு சென்று உயர் கல்வியை கற்று சமுதாய  சேவையை செய்ய வேண்டும் என்றார்.

 இந்த விளக்கேற்று நிகழ்வில் 140 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு விளக்கேற்றி உறுதிமொழியும் ஏற்றுகொண்டனர்.