பெண் போலீசாரை முகாம் அலுவலகங்களில் பணியமர்த்தக் கூடாது!

பெண் போலீசாரை முகாம் அலுவலகங்களில் பணியமர்த்தக் கூடாது!

ம.பா.கெஜராஜ்,

  காவல் அலுவலர்களின் தங்குமிடத்தில் எப்போதுமே அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த முகாம் அலுவலகங்களில் இனி பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

 ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பெண் போலீஸை பாலியல் பலாத்காரம் செய்தார் என்கின்ற குற்றச்சாட்டு எழுந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.  ரதன் பேரில் தான் இந்த உத்தரவிடப்பட்ட்டிருக்கிறதாம்.

இது பற்றின விவரம் வருமாறு,

 சென்னை போக்குவரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார்.

  அவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபியிடம் புகார் அளித்தார். விசாரணையின் அடிப்படையில் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.

    அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றினார்.

  அப்படியிருக்க, தன் கணவரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்த பெண் போலீஸ் மீது, மகேஷ்குமாரின் மனைவியும் முன்னாள் எஸ்ஐயுமான அனுராதா குற்றம் சாட்டினார்.

   அதில், எனது கணவர் மீது அந்த பெண் போலீஸ் பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் என்றெல்லாம் புகார் சொல்லி இருக்கிறார். அந்த மாதிரி எதுவும் இல்லை. அவர்கள் 2 பேருக்கும் ஏற்கெனவே திருமணத்தை கடந்த உறவு இருந்தது. இந்த விவகாரத்தில் அந்த பெண்ணையும் என் கணவரையும் பலமுறை கண்டித்து இருக்கிறேன்.

   அந்த பெண் போலீஸ் அவ்வப்போது பணம் என் கணவரிடம் கேட்பார். இவரும் உதவும் எண்ணத்துடன் பணம் கொடுத்து வந்தார். அந்த பெண் மறைமலைநகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். திடீரென்று எனது கணவரிடம் வீட்டின் கட்டுமான பணிக்கு ரூ.25 லட்சம் கேட்டார்.

  அவ்வளவு பெரிய தொகை இல்லை என எனது கணவர் சொன்னதால், அந்த பெண் எனது கணவரை மிரட்ட தொடங்கினார். தற்போது பொய் புகார் கொடுத்துள்ளார்.

   கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் 2 பேரும் தெரிந்தேதான் பழகினார்?கள். அப்புறம் எப்படி பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் என்று சொல்ல முடியும்.

   இந்த விவகாரத்தில் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னவர், 

 அந்த பெண் போலீஸும் மகேஷ்குமார் ஐபி எஸ்ஸிம் லாட்ஜிக்கு ஒன்றாக சென்றிருந்த சிசிடிவி காட்சிகளையும் அனுராதா வெளியிட்டார்.

   தொடர்ச்சியாக¢ டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ள பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

   இந்நிலையில் தான் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோரின் முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என்று டிஜிபி அலுவலகம் வாய் மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

  இந்த உத்தரவின் மீதான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று பலரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.