ஒரே ஒரு பட்டியிலன பெண் வசிக்கும் ஊராட்சியை தனி தொகுதியாக்குவதா? அட ஆபிசர்களா?

  ஜி.கே.சேகரன்,

   வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்து அமைந்துள்ளது அம்முண்டி கிராம ஊராட்சி.

   நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அம்முண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு,  இந்த ஊராட்சியினை பட்டியிலின பெண்களுக்கான தனி ஊராட்சியாக அறிவித்ததை எதிர்த்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 காரணம் அந்த ஊரில் பட்டியலினத்தவர்கள் மூன்று பேர் மட்டுமே உள்ளனராம். அதில் ஒரே ஒரு பெண் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆகவே இந்த அறிவிப்பை அரசு திரும்ப பெறாவிட்டால், அரசாங்க அடையாள அட்டைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்க்கு வந்த திருவலம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

   மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்முண்டி ஊராட்சியில் மொத்தம் 2045 வாக்குகள் உள்ளது. இதில் ஒரு ஆண், 2 பெண் என 3 பேர் மட்டுமே பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள்.மற்றவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

  தற்போது எங்கள் ஊராட்சி தாழ்த்தப்பட்டோர் தனி பெண் என ஊராட்சி என ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.

  எங்கள் ஊராட்சியில் உள்ள 2 பட்டியிலன பெண்களில் ஒருவர் ஏற்கனவே விழுப்புரத்தில் சென்று செட்டில் ஆகிவிட்டார். ஒருவர் மட்டுமே இங்கு வசித்து வருகிறார்.

    இந்நிலையில் பட்டியலினத்தில் ஒரே ஒரு பெண் வசிக்கும் ஊராட்சியை அரசு எப்படி தனி ஊராட்சியாக அறிவித்தது என தெரியவில்லை.

 ஆகவே இதை மாற்றி அரசு அறிவிக்க வேண்டும் என கூறினர்.இல்லையென்றால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.