நீட் தேர்வுக்கு ஏழை மாணவரை காரில் அழைத்து சென்ற ஆட்சியர்!

 

  1. நீட் தேர்வுக்கு ஏழை மாணவரை காரில் அழைத்து சென்ற ஆட்சியர்!

  கு.அசோக்,

ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்துள்ள நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமத்து மாணவனை தனது காரில் அழைத்து சென்று  பத்திரமாக மையத்தில் சேர்த்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கிராமத்தில் இருந்து ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்த வேடியப்பன் என்ற  மாணவன் பகுதிக்கு செல்ல முடியாமல் இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர், அமர் குஷ்வாஹா உடனடியாக தக்க சமயத்தில் அவரை அழைத்து தனது காரில் ஏற்றிச் சென்று தேர்வுக்கு அனுப்பி வைத்தார்.

 

குறிப்பு: அதே ஏலகிரியில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக நான்கு குடும்பங்கள் மனு மேல் மனு அளித்து உதை வாங்கியதும், பொய் வழக்கில் சிக்கியதும் தான் மிச்சம்.

  அய்யா அவர்கள் பார்வைக்கு இந்த சங்கதியை கீழ் மட்ட அதிகாரிகள் தெரிவிப்பார்களா?