ஆணழகன் போட்டியில் அண்டை மாநிலத்தவர்!

கு.அசோக்,
காட்பாடியில் நடைபெற்ற மிஸ்டர் சௌத் இந்தியா 2023 போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்கள் உடல் கட்டமைப்புகளை காட்டி அசத்தல்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் லாரா பிட்னஸ் அன்ட் ஸ்னாப் பிட்னஸ் சார்பில் மிஸ்டர் சௌத் இந்தியா 2023 ஆணழகன் போட்டி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 183 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ். மென்ஸ் டிஜிட் என 55 கிலோ எடை முதற்கொண்டு 80 கிலோவிற்கு மேல் உள்ள எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்கள் உடல் கட்டமைப்புகளை வெளிப்படுத்தி காட்டி அசத்தினர்
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ், ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து கைகளை தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.