அமைச்சர் உதயநிதி திருப்பத்தூர் வருகிறார்! ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு!

அமைச்சர் உதயநிதி திருப்பத்தூர் வருகிறார்! ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு!

 ஆர்.ரமேஷ்

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மண்டலவாடி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வருகின்ற ஜூலை மாதத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார்.

  பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.அ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன், பால்வளத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

  உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பானு, வட்டாட்சியர்கள் திரு.சிவப்பிரகாசம், திரு.குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.