மதுரை தீயணைப்புத்துறை வாகனங்கள் வேஸ்ட்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
மதுரை தீயணைப்புத்துறை வாகனங்கள் வேஸ்ட் என்று மக்கள் சொல்கிறார்கள்.
அங்குள்ள தீயணைப்பு வாகனங்கள் பல பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளனவாம், ஏதோ ஓரளவுக்கு வண்டி ஓடுவதற்குக்கூட அந்தந்த நிலைய அதிகாரிகள் அவர்களது சொந்த செலவில் தீயணைப்பு வாகனங்களை சீர் செய்து கொள்கிறார்களாம்.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்கள், 25 வாகனங்கள் உள்ளன. அனைத்தும் 10 முதல் 15 ஆண்டுகள் 'வயது' உடையவை.
இந்நிலையில் அவற்றின் உதிரிபாகங்கள் பல கழன்றும், துருப்பிடித்தும் உள்ளன. இதுல 'டிங்கிரிங்' வேலை செய்து சமாளிக்கின்றனர்.
இதையெல்லாம் மேலதிகாரிகள் கண்டு கொண்டால் சரியாகும் என்கிறார்கள் தீயணைப்பு ஊழியர்கள்.