சூறையாடப்படும் ஏரி கிராவல்!
கு.அசோக்,
பானாவரம் அருகே அனுமதி பெறாமல் கிராவல் மண் எடுத்த டிராக்டர், ஜேசிபி வாகனம் பறிமுதல், ஒருவரை¢ கைது செய்த பானாவரம் போலீசார்.
இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் காவல் எல்லைக்கு உட்ப்ட்ட தப்பூரில் இருந்து தாங்கள் செல்லும் ரோட்டோரமாக உள்ள ஏரியில் அனுமதி பெறாமல் கிராவல் மண்ணை டிராக்டர் மூலம் கடத்துவதாகபானாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டருக்கு கிராவல் மண் நிரப்பிக் கொண்டிருந்துள்ளனர்.
போலீஸ்சாரை பார்த்ததும் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் ஓட்டுநர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
போலீசார் டிராக்டர் ஓட்டுனரை மாடிக்கு பிடித்தனர். ஜேசிபி இயந்திரம், ட்ராகடரை பறிமுதல் செய்தனர். போலீஸ்சார் விசாரணையில் டாக்டர் ஓட்டுநர் தப்பூர் காலனி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஜேசிபி இயந்திரம் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்

admin
