இளம் சிறார்க்கு குட்காவா? எஸ்.பி.காட்டம்!

இளம் சிறார்க்கு குட்காவா? எஸ்.பி.காட்டம்!

க.பாலகுரு,

 மளிகை கடையில் 12 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

   திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கூலிப் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

  அதன்படி, திருவாருர் அருகே வடபாதிமங்கலம் காவல் சரகம், புனவாசல் மெயின் ரோட்டில் பஷீர் அகமது என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

  அந்த மளிகை கடையில் குட்கா மறைத்து வைத்திருப்பதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வடபாதிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் மளிகைக்கடையை சோதனை செய்தனர்.

 அப்போது மறைத்து வைத்திருந்த ஹான்ஸ் மற்றும் கூலிப் 12 கிலோ (மதிப்பு ரூ.15,000/-) கைப்பற்றினர்.

 மேலும் அதனை விற்பனைக்காக வைத்திருந்த பஷீர் அகமது 35/25, த/பெ. ஜெகபர்அலி, மெயின் ரோடு, புனவாசல், வடபாதிமங்கலம் என்பவரை விசாரணை செய்து இவருக்கு எவ்வகையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கூலிப் வருகிறது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 தொடர்ச்சியாக வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

  மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இளம் வயதினரின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்துதல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரித்துள்ளார்கள்.