எங்க பிரதமரையே விமர்சனம் செய்கிறாயா? பிபிசி அலுவலகம் ரெய்டு!

எங்க பிரதமரையே விமர்சனம் செய்கிறாயா? பிபிசி அலுவலகம் ரெய்டு!

 ஜார்ஜ்.ரவி

  மும்பையில் உள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனமான பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.

 . 'இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

   இந்த ஆவணப்படத்தின் யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி இருந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

   பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

  அப்போது வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து சேகரித்ததாகவும் தெரிகிறது.

  இதற்கு இந்திய ஊடகங்கத்தினர் எவரும் குரலெழுப்பவில்லை.