போதை ஊசி போட்டு ஒருவர் பலியான வழக்கு! 19 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

 போதை ஊசி போட்டு ஒருவர் பலியான வழக்கு! 19 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

கு.அசோக்,

   போதை ஊசி போட்டு ஒருவர் பலியான சம்பவத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குற்றவாளிக்கு வேலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை ரூ.5.50 லட்சம் அபராதம் விதித்தது

 வேலூர்மாவட்டம், வேலூரில் கடந்த 2007 ஆம் ஆண்டு காந்தி ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஜார்கண்ட் மாநிலம் பால குண்ட் ரா கிராமத்தை சேர்ந்த அமிர்தம்பா என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த 4 பேரை வேலூரில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து  தங்கி இருந்தார்.

   இந்த நிலையில் 4 பேருக்கு போதை ஊசி போட்டதில் 4 பேரும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகதூர் ராம் இறந்து பலியாகிவிட்டார்.

  மற்ற மூன்று பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று பின்னர் அவர்கள் நலமடைந்தனர்.

 இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கு வேலூர்  முதலாவது மாவட்ட  கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போதை ஊசியால் ஒருவர் பலியானதற்கு அமிர்தம்பா தான் காரணம் அவர் குற்றவாளி என கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5.  50 லட்சமும் அபராதம் விதித்தார்.

  இதில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும்,பாதிப்படைந்து நலமடைந்த நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும் 50 ஆயிரம் அரசுக்கும் அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.

  இதன் அடிப்படையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.