செத்த பின்னரும் கோரிக்கையா? ஓடி ஓடி திட்டங்களை அறிவிக்கும் அரசுக்கு இந்த குறைபாடும் தெரியவேண்டும் அல்லவா?

செத்த பின்னரும் கோரிக்கையா? ஓடி ஓடி திட்டங்களை அறிவிக்கும் அரசுக்கு இந்த குறைபாடும் தெரியவேண்டும் அல்லவா?

 ஜி.கே.சேகரன்,

   சவ ஊர்வலத்தை சாலையில் நிறுத்தி  பிணத்துடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம். சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் ரயில்வே கணவாய் கீழே தேங்கிய தண்ணீரில் உடல்களை எடுத்துச் செல்லும் அவலம் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.

  வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை, பட்டறை,பெரிய பட்டறை பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

  இவர்களுக்கான இருந்த சுடுகாட்டை அழித்து அதன் மேல் தாலுகா அலுவலகம் உட்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டது.

  இதற்காக இவர்களுக்கு ஊருக்கு எதிரே உள்ள ரயில்வே பாதையை தாண்டி சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது.

  அதற்கு செல்வதற்கு முறையான பாதை இல்லை இதனால் பொதுமக்கள் ரயில்வே கணவாய் வழியாக உடல்களை எடுத்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

  இதில் ரயில்வே கணவாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சுடுகாட்டுக்கு செல்வதற்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று கிளித்தான் பட்டறை பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் அவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

  அப்போது பொதுமக்கள் குடியாத்தம் செல்லும் சாலையில் கிளித்தான் பட்டறை அருகே சவ ஊர்வலத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  காட்பாடி குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பாதிப்படைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் காலதாமதமாக வந்தாலும் காவல்துறையினர் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

   தற்போது இந்த சவத்தை மட்டும் அடக்கம் செய்வதாகும் அடுத்த முறை சாவு ஏற்பட்டால் இதேபோன்று நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு மற்றும் நிரந்தர வழி கிடைக்காத வரையில் நாங்கள் மரணமடைந்தவரின் சடலத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசுக்கு தெரிவித்ததனர் .

  பின்னர் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்கி முட்டி அளவு தண்ணீரில் நான்கு பேர் மட்டுமே சுமந்த படியும் கொள்ளிச்செட்டியுடன் ஒருவரும் சுடுகாட்டிற்கு உடலை கொண்டு சென்றனர்.

  மற்றவர்கள் ஆபத்தான நிலையில் ரயில்வே சாலையை கடந்து மறுபுறம் சென்றனர்.

ஓடி ஓடி திட்டங்களை செய்வதாக அறிவிக்கும் அரசுக்கு இந்த குறைபாடும் தெரியவேண்டும் அல்லவா?