கட்டிங் கேட்கும் வங்கி மேலாளர்கள்! முற்றைகையிட்ட விவசாயிகள்!
ஜி.கே.சேகரன்,
பேரணாம்பட்டில் விவசாய கடன் பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்க பணம் வசூல் செய்யும் வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பெற்ற பணத்தை திரும்ப வழங்க கோரியம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எஸ்பிஐ வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எருக்கம் பட்டு, பத்தலபல்லி, கமலாபுரம், டிடி மோட்டூர், கொத்தூர், சாரங்கள், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
இவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன் பெற வேண்டுமெனில் தடையில்லா சான்று வழங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி போன்ற வங்கிகளில் சான்று பெற வேண்டும்.
இந்த சான்றை வழங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து வங்கியில் பணியுரிபவர்கள் பணம் வசூலித்து வந்த்தாக கூறப்பட்டு வந்தது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கும் கடன் பெறுவதற்கான தடையில்லா சான்றிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஆனால் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் தலைமையில் இளைஞரணி மாநில செயலாளர் சுபாஷ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பாரதஸ்டேட் வங்கி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கையாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். ஆர்பி.ஐ விதிகளின் படி நடத்தப்பட வேண்டும். விவசாயிகளிடமிருந்து தடையில்லா சான்றுக்கு பெறப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும்,வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

admin
