பெரிய குளம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! மக்கள் பீதி!

பெரிய குளம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! மக்கள் பீதி!

 எம்.ரபிக் ராஜா,

  தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பொது ஆய்வகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

 இந்த தீ விபத்தினால் சுமார் 20 லட்சம் மதிப்பீடு உள்ள ஆய்வு உபகரணங்கள் எரிந்து சேதமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதனால் மருத்துவமனை பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

 இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.