அம்போ ஆக்கப்பட்ட அம்மா உடற் பயிற்சிக்கூடம்!

கு.அசோக்,

அரசு உடற்பயிற்ச்சி கூடம் பயன்பாட்டிற்க்கு வராமல் காட்சி பொருளாக மட்டுமே இருந்து பாழாய் போய்கொண்டிருக்கிறது. அயை பூட்டியே கிடப்பதால் காயலான் கடைக்கு கூட லாயக்கற்ற நிலையில்  உபகரணங்கள்.. கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்.

 இராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞர்களின் பயன்பாட்டிற்க்கு விடாமல் பூட்டியே கிடப்பதால், அங்குள்ள உபகரணங்கள் துருபிடித்து  காயலான் கடைக்கு போடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

  இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து, உடலினை கட்டுகோப்பாக வைத்திருந்து, மன உறதியையும், ஒருமித்த கருத்தினை வளர்த்திடவும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க்கும் வகையில் இளைஞர்களை தயார் படுத்திடவும், கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடவும், கடந்த 2016-2017 ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 10-லட்சம் வீதம் 50-கோடி மதிப்பில் 1611 சதுர அடி பரப்பளவில் 500 இடங்களில் குறிப்பாக ஊரக பகுதியில் அம்மா உடற்பயிற்சி கூடம் உறுவாக்கப்பட்டது.

  ஆனால் இதுவரை முறையாக பல இடங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பாழாய்கிடக்கிறது. அதேபோல்   இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்க்கு கொண்டுவராமல் பூட்டியே கிடக்கிறது.

பலமுறை இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததது ஏன் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், இளைஞர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

  இனியாவது ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் வட்டார வளர்சி அலுவலர்கள், சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள்  மேற்படி உடற்பயிற்சி கூடத்தின் மீதும் இப்பகுதி இளைஞர்களின் மீதும்  அக்கறை வைத்து எந்த நோக்கத்திற்காக அரசு திட்டத்தை துவக்கியதோ, அந்த நோக்கம் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் கவணம் செலுத்திட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.