வாலாஜாவில் போக்குவரத்து நெரிசல்!

வாலாஜாவில் போக்குவரத்து நெரிசல்!

 கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

 அப்போது அரசியல் வாதிகள், தங்கள் ஆதரவாளர்களுடன் உற்சாகமாக  வருகைதந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

 வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் வருகை  அதிகமாக உள்ளதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

   போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாலாஜா காவல் துறையினர் ஈடுபட்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஏராளமான அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் சுயேட்சை  வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் என பெருமளவு திரளாக வருகை தந்திருந்தனர். வேட்புமனுதாக்கலும் விறுவிறுப்பாக நடந்தது.