12,57,316 பேர் மொத்த வாக்காளர்கள்:- பட்டியலை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்!

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய கிடங்கில் வேலூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக,கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அதிமுக, ஆம் ஆத்மி, தேமுதிக ,திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இம்மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அனைக்கட்டு, கேவிக்குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன இதில் ஆண் வாக்காளர்கள் 6,08639, பெண் வாக்காளர்கள் 64 8515 பேரும் மூன்றாம் பாலினம் 162 உட்பட 12 57316 பேர் மொத்த வாக்காளர்களாக உள்ளனர்.
இம்மாவட்டத்தில் 1303 வாக்குசாவடிகள் அமைந்துள்ளது வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வரையில் பொதுமக்கள் பார்வைக்காக இந்த வாக்காளர் பட்டியல் வட்டாட்ச்சியர் அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் நகராட்சி அலுவலகங்கள் ஆகிய 673 இடங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பெயர் நீக்குதல் சேர்த்தல் முகவரி மாற்றம் திருத்தம் ஆதார் இணைத்தல் போன்ற பணிகளை செய்துகொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் 4 மற்றும் 5,18,19 ஆகிய 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்களும் மக்களின் வசதிகாக வைக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்திகொள்ள வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.